எங்களைப் பற்றி

Vaarthai Evangelical Church Inc-ன் வரலாறு, விசுவாசம் மற்றும் போதகக் குழுவினரைக் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

எங்கள் தொடக்கம்

ஆலயத்தின் நற்செய்தி வரலாறு

நாங்கள் தேவ வசனத்தில் வேரூன்றி, அன்பினால் வளர்ந்து, கிருபையால் ஒன்றுசேர்ந்த ஒரு தமிழ் சபை.

நான் வந்ததற்கு காரணம் இல்லையா? இந்த கேள்வியை கேட்டது, தாவீது. தான் மேய்ப்பனாய் இருந்த காலத்தில், கோலியாத்தை முறியடிப்பதற்கு முன்பாக, அவன் கேட்ட கேள்வி இது. எங்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் இதுவே. தாவீதை விட நாம் பாக்கியம் பெற்றவர்கள், தாவீது, இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே கோலியாத்திடம் போரிடச் சென்றான். ஆனாலும் யுத்த கலம் அவனுக்கு முன்பாக இருந்தது, எதிரி அவனுக்கு எதிராக நின்று கர்ச்சித்துக் கொண்டிருந்தான்.

ஆனால், இன்று நம்முடைய எதிரி, ஏற்கனவே, இயேசு கிறிஸ்துவினாலே, சிலுவையிலே, தோற்கடிக்கப் பட்டு விட்டான்! தாவீது, கோலியாத்தை கொன்று போட்ட பின்பு, இஸ்ரவேல் மக்கள் மீதமிருந்த எதிரிகளையும் துரத்தினது மட்டுமல்ல, திரும்பி வந்து, எதிரிகளின் முகாம்களைக் கொள்ளையிட்டார்கள்! இன்று நாங்கள் வெற்றியாளர்கள்! நாங்கள் போரிட்டதனினால் அல்ல, கிறிஸ்து எங்களுக்காக அதை செய்து முடித்ததனாலே!

வேதத்தில் இருந்து கூறப்பட்ட இந்த வார்த்தைகள், இன்றைக்கும் உயிருள்ளதாகவும், வல்லமை உள்ளதாகவும், வேலை செய்கிறதாகவும் இருக்கிறது. இந்த வார்த்தையைக் கேட்போம்! வார்த்தையின்படி வாழுவோம்! வார்த்தையைச் சுமந்து செல்வோம்!

நீங்கள் பிரிஸ்பன் நகரத்தில் வசிப்பவர் என்றால், நீங்களும் வெற்றியாளர்களாக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். வாருங்கள், வார்த்தையின்படி வெற்றியாளர்களாக இணைந்து தேவனை ஆராதிப்போம்!

Church Family & History Banner
Pastor Weslyn
தலைமைத்துவம்

எங்கள் போதகரைப் பற்றி

போதகர் வெஸ்லின் 2007ம் ஆண்டு, முதன்முதலாக ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது, பிரிஸ்பேனில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய வேண்டும் என்ற தெளிவான தரிசனத்தை தேவன் அவருக்கு கொடுத்தார். ரீமா பிரிஸ்பேன் ஐக்கியம் மற்றும் சிட்டிபாயிண்ட் தமிழ் சபையில் 20 ஆண்டுகளாக ஊழியம் செய்தார்.

இவர் பொது மற்றும் குடும்ப ஆலோசகராகவும் (Clinical Counsellor) பணி புரிந்து வருகிறார். இவர் மனைவி Dr அறிவு வெஸ்லின், பொது மருத்துவராக (General Practitioner) பணி செய்கிறார்கள். தேவன் இவர்களுக்கு, இரட்டிப்பான ஆசீர்வாதமாக, Jeremy & Timmy என்ற இரட்டையர்களை கொடுத்துள்ளார். பள்ளி இறுதி ஆண்டுகளிலே இவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்!

பிரிஸ்பேன் தமிழர்களுக்கு இவர் அறிமுகமானவர். தமிழ் மக்கள், கிறிஸ்து தருகின்ற உண்மையான விடுதலையை அனுபவிக்க வேண்டும் என்கிற பெரிய தரிசனம் அவருக்கு உண்டு. அதே தரிசனத்தோடு இருக்கிற குடும்பங்கள் அவரோடு இணைந்ததின் விளைவாக, “வார்த்தை சுவிசேட திருச்சபை” பிறந்தது.

எங்கள் நோக்கம் (Mission)

இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக, ஆராதனைகளிலும், இல்லங்களிலும், சுற்றுப்புறங்களிலும், சமுதாயத்திலும், நாம் சொல்வதின்படி வாழ்வதே எங்கள் நோக்கம். நற்செய்தி விசுவாசக் கூட்டமைப்பாகச் செயல்பட்டு ஆத்துமாக்களை வழிநடத்துகிறோம்.

எங்கள் இலக்கு (Vision)

ஒவ்வொரு விசுவாசியும் தங்களது ஆவிக்குரிய தாலந்துகளைக் கண்டறிந்து திருச்சபையிலும் சமுதாயத்திலும் பயன்படுத்த வேண்டும். குடும்பங்கள் கட்டப்படவும், சமுதாயம் கிறிஸ்துவின் அன்பினால் மாற்றமடையவும் வழிகாட்டுகிறோம்.

நாங்கள் நடக்கும் வழி

எங்கள் விசுவாசப் பண்புகள்

நமது ஊழியங்களையும் முடிவுகளையும் வழிநடத்தும் ஒழுக்கங்கள்.

1

வேதாகமத்தின் அதிகாரம்

பரிசுத்த வேதாகமம் என்பது தேவனால் அருளப்பட்ட, பிழையற்ற, ஆலோசனைகளின் இறுதி வழிகாட்டி என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.

2

கிருபை நிறைந்த ஐக்கியம்

மக்களின் குறைகளைத் தாங்கி, ஒருவருக்கொருவர் மன்னித்து கிறிஸ்துவுக்குள் வளரும் கிருபையுள்ள சூழலை உருவாக்க விரும்புகிறோம்.

3

இல்லக் குழுக்கள் (LifeGroups)

விசுவாசம் என்பது தனிப் பயணம் அல்ல. வாராந்திர இல்லக் கூட்டங்கள் மூலம் ஆழமான உறவுகளையும் விசுவாச வளர்ச்சியையும் வளர்க்கிறோம்.

4

தியாகமுள்ள சேவை

கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்பது பிறருக்குச் சேவை செய்வதே. நமது தாலந்துகளையும், நேரத்தையும் பிறர் நன்மைக்காகப் பயன்படுத்துகிறோம்.

விசுவாச அறிக்கை (Statement of Faith)

நாங்கள் உறுதியாக விசுவாசிக்கும் வேதாகமக் கோட்பாடுகளின் தொகுப்பு.

வேதப்பகுதிகள்

பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் தேவனால் அருளப்பட்ட பிழையற்ற வார்த்தை என்றும், அதுவே நமது விசுவாசத்தின் இறுதி அதிகாரம் என்றும் நம்புகிறோம்.

திரியேக தேவன்

பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் நித்தியமாக வீற்றிருக்கும் ஒரே தேவனை நாங்கள் விசுவாசிக்கிறோம்.

இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்துவின் தெய்வீகம், கன்னித்தாய் பிறப்பு, பாவமில்லாத வாழ்க்கை, சிலுவை மரணம், உடலின் உயிர்த்தெழுதல் மற்றும் அவரது மறுவருகையை நம்புகிறோம்.

இரட்சிப்பு

இரட்சிப்பு என்பது தேவனுடைய இலவசக் கிருபை. இயேசு கிறிஸ்துவின் சிலுவை பலியின் மேல் வைக்கும் விசுவாசத்தால் மட்டுமே பாவ மன்னிப்பும் மீட்பும் உண்டாகிறது.

திருச்சபை

கிறிஸ்துவை விசுவாசிக்கும் அனைத்து விசுவாசிகளின் ஆன்மீக உடலே சபை என்றும், அது ஆராதனை மற்றும் ஐக்கியத்தால் வெளிப்படுகிறது என்றும் நம்புகிறோம்.

ஆலயத் தலைவர்கள்

திருச்சபை ஊழியர்கள்

எங்களது சபையை வழிநடத்தும் மற்றும் பராமரிக்கும் குழுவினரைச் சந்தியுங்கள்.

Ps Jeyakaran D Weslyn

Ps Jeyakaran D Weslyn

Pastor & President

எல்லாராலும் வெஸ்லின் என்று அறியப்பட்டவர்! Brisbane இயேசுவுக்கு என்ற தரிசனத்தைத் தாங்கி, அதை சபைக்கும் கொடுத்து வருகிறார்.

Mr Devairakkam Paul

Mr Devairakkam Paul

Secretary

திருச்சபையின் நிர்வாக மற்றும் அலுவலகப் பணிகளைப் பொறுப்புடன் கவனித்து, சபையின் செயல்பாடுகளுக்கு உதவுகிறார்.

Mr Joe Jeyandran

Mr Joe Jeyandran

Treasurer

திருச்சபையின் நிதி நிர்வாகப் பணிகளை நேர்மையுடனும் பொறுப்புடனும் கவனித்து, ஆலயத்தின் நற்பணிகளுக்குத் துணைபுரிகிறார்.

நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு (Church Governance)

Vaarthai Evangelical Church Inc என்பது 1981 சங்கங்கள் ஒருங்கிணைப்புச் சட்டத்தின் (Qld) கீழ் குயின்ஸ்லாந்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கூட்டமைப்பு (பதிவு எண்: IA58572), மற்றும் ஆஸ்திரேலிய தர்ம நிறுவனங்கள் ஆணையத்தில் (ACNC) பதிவு பெற்ற தர்ம நிறுவனம். ABN 32 327 903 035.

எங்கள் திருச்சபையானது, சபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரை உள்ளடக்கிய நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. நாங்கள் எங்களது பதிவுசெய்யப்பட்ட அரசியலமைப்பு (Constitution), நிதிக் கொள்கைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கைகளின் கீழ் செயல்படுகிறோம்; மேலும் பொதுப் பொறுப்பு காப்பீடு (public liability insurance) வைத்துள்ளோம்.

நாங்கள் குயின்ஸ்லாந்தின் குழந்தைகள் பாதுகாப்புத் தரங்களை (Child Safe Standards) பின்பற்றுகிறோம். குழந்தைகள் மற்றும் இளைஞர் ஊழியங்களில் ஈடுபடும் அனைவரும் கட்டாயமாக நடப்பில் உள்ள Blue Card வைத்திருக்க வேண்டும்.

எங்கள் நிர்வாக ஆவணங்களின் நகல்கள் தேவைப்பட்டால் info@vaarthai.org.au என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.